2026 மே 06, புதன்கிழமை

மட்டு. மாவட்டத்தில் 70 பாடசாலைகள் அபிவிருத்தி

Kogilavani   / 2013 ஏப்ரல் 06 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

இந்த அரசாங்கம் இன்று கல்விக்கான அபிவிருத்தியையும் அதிகமாக மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 70 பாடசாலைகள் 5000 பாடசாலைகள் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. இதற்கு நான்கு கோடி ரூபா செலவு செய்யப்படுகின்றது' என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

5000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நாவற்குடா தருமரட்ணம் வித்தியாலயத்தின் அபிவிருத்தி பணிகளை நேற்று ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'அதேபோன்று ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 26 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கு ஒவ்வொரு பாடசாலைக்கும் 6 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைவிடவும் மஹிந்தோதய திட்டத்தின் கீழ் பல பாடசாலைகளில் இன்று ஆய்வுகூடங்கள் நிறுவப்பட்டு வருகின்றன'  என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .