2025 மே 03, சனிக்கிழமை

சட்டவிரோத வலைகள் 76 கைப்பற்றப்பட்டுள்ளன

Kanagaraj   / 2014 மார்ச் 08 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

மட்டக்களப்பு கடல்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் சட்டவிரோத வலைகள் 76 நேற்றையதினம் இரவு கைப்பற்றப்பட்டுள்ளதாக கடல்தொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் ரி.ஜோர்ச் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கல்லடி, நாவற்குடா, காத்தான:குடி, ஆரையம்பதி உள்ளிட்ட பிரதேச வாவியில் கடற்றொழில் பரிசோதகர்கள் வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட தேடுதல்களிலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த வலைகள் கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டதாகவும், சட்டவிரோத வலைப்பாவனை தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த வலைகளை திங்கட்கிழமை நீதிமன்றில் ஒப்படைத்து எரித்து அழிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

அருகிவரும் 112 வாவி இன மீன்கள் உள்ள மட்டக்களப்பு வாவியில் சட்டவிரோத வலைகள் பாவிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வீச்சுவலைகள் மாத்திரமே பாவிப்பதற்கு அனுமதி உள்ளது.

இந்த நிலையில் சட்ட விரோத வலைகளின் பாவனையைத் தடுக்கும் வகையிலான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கைப்பற்றப்பட்ட வலைகள் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான பெறுமதியுடையவையாகும். அருகிவரும் மீன் இனங்களைப்பாதுகாக்க வேண்டியது மீனவர்களதும் மக்களதும் கடமையாகும் என்றும் உதவிப்பணிப்பாளர் மேலுமு; தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X