2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

சுழல் காற்றினால் 774 பேர் பாதிப்பு: மட்டு. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்

Super User   / 2012 ஜூலை 04 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி, ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை வீசிய சுழல் காற்றினால் 173 குடும்பங்களை சேர்ந்த 774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

மாவட்டத்தின் வாகரை, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர் பற்று, வாழைச்சேனை, ஓட்டமாவடி, கிரான் மற்றும் ஏறாவூர் நகர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வீடுகள் முழுமையாகவும் 168 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.

சேதமடைந்த இடங்களை நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்ட இவர், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஆலோசனைக்கமைய பிரதேச செயலாளர்களிடமிருந்து விபரங்கள் பெறப்பட்டு அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .