2026 மே 09, சனிக்கிழமை

மட்டக்களப்பில் 8 மணித்தியால மின்வெட்டு

Kogilavani   / 2012 மார்ச் 14 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை  வியாழக்கிழமை காலை 8.30 மணி  தொடக்கம் மாலை  4.30 மணி வரை மட்டகளப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் 8 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை அறிவித்துள்ளது.

பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு, களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், மாங்காடு, குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு மற்றும் தாளங்குடா ஆகிய இடங்களில் இம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை காலை 08.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை மண்டூர், சங்கர்புரம், கணேசபுரம், குறுமண்வெளி, மகிழூர், பழுகாமம், கொக்கட்டிச்சோலை,  மகிழடித்தீவு, முதலைக்குடா, அம்பிலாந்துறை, கடுக்காமுனை, பெரியபோரதீவு, முனைத்தீவு, தும்பங்கேணி,  திக்கோடை, 39ஆவது கிராமம்,  தாந்தாமலை,  களுவாஞ்சிக்குடி,  களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம்,  மாங்காடு,  குருக்கள்மடம்,  கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாழங்குடா ஆகிய பிரதேசங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .