2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சாய்பாபாவின் 89ஆவது ஜனன தினம்

Gavitha   / 2014 நவம்பர் 23 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்
,எஸ். பாக்கியநாதன்,வி.சுகிர்தகுமார் 

பாகவான் ஸ்ரீ சத்திய சாய்பாபாவின் 89ஆவது பிறந்த ஜனன தினத்தை முன்னிட்டு, களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள  சத்திய சாய் சமித்தி நிலையத்தில் விஷேட நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றன.

களுவாஞ்சிகுடியில் சத்தியசேவா நிலையத்தின் தலைவர் கா.நடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்பாபாவின் பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட புதிய திருவுருபப் படங்கள் புணருத்தாருணம் செய்யப்பட்ட பீடத்தில் வைக்கப்பட்டன.

இந்நிலையத்தின் உபதலைவரும் பிரதேச செயலாளருமான மா.தயாபரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது, விஷேட பூஜையும் பஜனை நிகழ்வுகளும் நடைபெற்றன. இதில் பல பிரதேசங்களையும் சேர்ந்த சாய்பாபாவின் பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X