2026 மே 06, புதன்கிழமை

கைகலப்பில் 9 பேர் காயம்

Suganthini Ratnam   / 2013 மே 27 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட கைகலப்பின்போது 9 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த கைகலப்புச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டியின் எல்லே போட்டி காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள ஆரையம்பதி விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆரையம்பதி இராஜதுரை இளைஞர் கழகத்திற்கும் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள களுவன்கேணி இளைஞர் கழகத்திற்கும் இடையில் இந்த எல்லே  போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஒரு கழகத்தின் ஆதரவாளர்கள் மைதானத்தில் கூச்சலிட்டதன் காரணமாக இந்த கைகலப்பு ஏற்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார்  நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த கைகலப்பின்போது 9 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த 9 பேரில் 8 பேர்; சிகிச்சை பெற்று நேற்றையதினமே வெளியேறியதாகவும் ஒருவர் மாத்திரமே சிகிச்சை பெற்றுவருதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கைகலப்புச்  சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .