2025 மே 02, வெள்ளிக்கிழமை

உன்னிச்சை பாவற்கொடிச்சேனை பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த 93 குடும்பங்கள் மீள்குடியேற விருப்பம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பாவற்கொடிச்சேனை பிரதேசத்திலிருந்து  1987ஆம் ஆண்டு அசாதரண சூழ்நிலையால்  இடம்பெயர்ந்து காத்தான்குடியில் தங்கியுள்ள 93  குடும்பங்கள் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற விரும்பியுள்ளதாக உன்னிச்சை முஸ்லிம் மீள்குடியேற்ற சங்கத் தலைவர் எம்.ஏ.கபூர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆராயும் கூட்டம் காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் புதன்கிழமை  (05) நடைபெற்றது.

இந்த மக்களை மீள்குடியேற்றும் ஒழுங்குகளை மேற்கொள்வது தொடர்பில்  இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேற்படி 105 குடும்பங்கள் இடம்பெயர்ந்து காத்தான்குடியில் தங்கிய நிலையில்,  12 குடும்பங்கள் 2011ஆம் ஆண்டு டிசெம்பரில்  உன்னிச்சை பாவற்கொடிச்சேனை பிரதேசத்தில் மீள்குடியேறியதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், கிராம அலுவலகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .