2026 மே 07, வியாழக்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற 95 பேருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2013 மே 15 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

சட்டவிரோத மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 37 இலட்சம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் புலன் விசாரணைக்கு பொறுப்பான புலனாய்வு அதிகாரி எம்.ஆர்.எம்.பி.தஸநாயக்க தெரிவித்தார்.

சட்டவிரோதமாக மின்மானிகளை உடைத்து மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில்  மட்டக்களப்பு மாவட்டத்தின்  வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் 50  பேரும் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 45 பேரும்  கடந்த சனி, ஞாயிறு ஆகிய தினங்களில்  கைதுசெய்யப்பட்டனர்.

இந்த 95 பேரையும் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து இவர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .