2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

9,577 குடும்பங்கள் வரட்சி நிவாரணம் பெறத் தகுதி

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 9,577  குடும்பங்கள் வரட்சி  நிவாரணம் பெறுவதற்கு தகுதியாக உள்ளனர். இவர்களின்   விபரங்களை  தெரிவுசெய்து அனர்ந்த முகாமைத்துவ அமைச்சின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திட்டங்கள் தொடர்பான  மீளாய்வுக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.  இதன்போது வரட்சி நிவாரணம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என பிரதேச செயலாளரிடம் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கேட்டார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே  பிரதேச செயலாளர் இதனைக் கூறினார்.

இப்பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 44 கிராம அலுவலகர் பிரிவுகளிலிருந்தும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விபரங்கள்  கிராம சேவை உத்தியோகஸ்தர் ஊடாக பெறப்பட்டது.

வரட்சியினால் பயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.  சில பிரதேசங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும்  பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்;தினம் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X