2025 மே 08, வியாழக்கிழமை

'அகில துறவியர் மாநாட்டில் இலங்கையர்களும் கலந்துகொள்ள வேண்டும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கேஎ.ல்.ரி.யுதாஜித்

கும்பகோணத்தில் எதிர்வரும் மாசி மாதம் நடைபெறவுள்ள அகில பாரதத் துறவியர் மாநாட்டில் இலங்கையிலுள்ள துறவியர்களும் இந்து அன்பர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று போரூர் ஆதீனத்தின் இளைய வட்டம் வணக்கத்துக்குரிய சீர்வளர்சீர் மருதாசல அடிகளார் வேண்டுகோள் விடுத்தார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் சனிக்கிழமை(05) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,

இந்த மாநாட்டில் உலக இந்துக்கள் பற்றியும் இந்துக்களின் ஒன்றுபட்ட செயற்பாடுகள் பற்றியும் சிந்திக்க இருக்கின்றோம். மேலும்,இந்துக்களின் வளர்ச்சிகள், சிக்கல்கள், இலங்கையில் இருக்கக் கூடிய இந்துக்களுக்குரிய பிரச்சினைகள் பற்றியும் ஆராயவுள்ளோம்.

எதிர்வரும் மாசி மாதம் 18ஆம் திகதி முதல் 2ஆம் திகதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.இதில் உலகம் முழுவதும் இருக்கக் கூடிய துறவியர்கள், இந்து அன்பர்கள் என 5,000 பேர் கலந்துகொள்ளவுள்வர் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

மேலும், 18ஆம் திகதி காலை தொடக்கவிழா நடைபெறும்.அதனைத் தொடர்ந்து, மாலை 3 மணிக்கு கும்பகோணத்தில் இருக்கக் கூடிய கோயில்களை வலம் வந்து கும்பகோணக் குளத்தில் ஆராதனை இடம்பெறும். மிகுதி இரண்டு நாட்களிலும் நிகழ்வுகள், சான்றோர்களின் சொற்பொழிவுகள் என்பன நடைபெறவுள்ளன.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளவிரும்புவோர் பின்வரும் முகவரியுடன் தொடர்புகொள்ளவும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X