2025 மே 26, திங்கட்கிழமை

அங்குரார்ப்பண நிகழ்வு

Niroshini   / 2017 மே 13 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

நெல்சிப் வேலைத் திட்டத்தின் மூலம், ஓட்டமாவடி மக்களின் நீண்ட நாள் தேவையாக காணப்பட்டு வந்த பஸ் தரிப்பு நிலையம் மற்றும் மீன் சந்தை நிலையம் என்பன திறந்து வைக்கும் நிகழ்வு, நேற்று மாலை நடைபெற்றது.

ஓட்டமாவடி மேற்கு பிரதேச சபை செயலாளர் எஸ்.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதமஅதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் கலந்துகொண்டார்.

மேலும் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சித்திரவேல், வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன், வாகரை பிரதேச சபை செயலாளர் எஸ்.இந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X