2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'அடுத்த மாவீரர் தினம் பிரமாண்டமாக கொண்டாடப்படும்'

Kogilavani   / 2016 நவம்பர் 28 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல்,பேரின்பராஜா சபேஷ், கனகராசா.சரவணன் 

'நான் உயிரோடு இருந்தால், அடுத்த மாவீரர் தினமானது, இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பிலோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பிலோ, மிக பிரமாண்டமான முறையில் கொண்டாடப்படும். வாகரையில் அல்லது மாவடிமுன்மாரியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்; பி.அரியநேந்திரன் தெரிவித்தார்.

'தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தில், ஐம்பதாயிரம் மாவீரர்;கள் உயிரிழந்திருக்கினறனர்' என்றும் அவர் கூறினார்.   

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில், மாவீரர்களை நினைவு கூறும் நிகழ்வு, மட்டக்களப்பில், ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறிகார்.

இங்கு தொடர்ந்துரைத்த அவர்,  

'1982ஆம் ஆண்டு முதல் 2009 மே மாதம் 19ஆம் திகதி வரை, ஐம்பதாயிரம் (50,000) மாவீரர்கள் உயிரிழந்துள்ளார்கள்.
1982ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 17,658 மாவீரர்களே உயிரிழந்திருந்தார்கள். ஆனால், 1982ஆம் ஆண்டு முதல் 2009 மே மாதம் 19ஆம் திகதி வரை, ஐம்பதாயிரம் (50,000) மாவீரர்;கள் உயிரிழந்திருக்கின்றார்கள' என்றார்.

'மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், மாவீரர்;களை நினைவு கூறமுடியாது. ஆனாலும், நாங்கள் மாவீரர்;களை நினைவு கூர்;ந்தோம். நல்லாட்சி அரசாங்கமும், மாவீரர்;களை நினைவு கூருவதற்கு அனுமதி தராவிட்டாலும்கூட, கெடுபிடிகள் இல்லை என்பதை பார்க்க கூடியதாக உள்ளது.
 
மாவீரர்;களை நினைவு கூருவதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இருந்த அந்த கெடுபிடி, இந்த அரசாங்கத்தில் தளர்த்தப்பட்டுள்ளது' என்றார்.
 
'நாடாளுமன்ற வரலாற்றிலே, முதன் முதலாக மாவீரருக்கு விளக்கேற்றிய ஒரு தலைவர்; என்றால் அந்த பெருமை சம்பந்தன் ஐயாவையே, சாரும்.

இன்று சம்பந்தனை பலர் விமர்சிக்கின்றார்;கள். ஏதோ தமிழ் தேசியத்திலிருந்து விலகிச் செல்கின்றார், உணர்வற்றவராக இருக்கின்றார் என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால், அவர் அவ்வாறு இல்லை.

2004 ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி, நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, த.தே.கூவிலிருந்து 22 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினர். 2004ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை மாவீரர்; தினம் இடம்பெற்றது. அன்றைய தினம, நாடாளுமன்றத்தில் விவாதமும்; இடம்பெற்றுக் கொண்டிருந்தது. சரியாக 6 மணி 5 நிமிடம் தலைவர் பிரபாகரனினால் வகுக்கப்பட்ட அந்த நேரத்தில்,  நாங்கள் 22  உறுப்பினர்களும் நாடாளுமன்றத்துக்கு முன்னாலுள்ள  நதியின் கரைக்கு முன்பாக 22 சட்டிகளை வைத்து  சுடரேற்றினோம். அதன் பின்னர் சம்பந்தன் ஐயா  அவ்விடத்திலிருந்து உரையாற்றியிருந்தார். வரலாறு அவ்வாறு இருக்கின்றபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளை நினைக்கவில்லை அல்லது மாவீரர்;களை விட்டு விலகிச் செல்கின்றது என்று கட்டுக்கதைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன.

'தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம் என்பது காலத்திற்கேற்ற விதத்தில் முறையாக நகர்;ந்து செல்கின்றது என்பதை நம் உணர்ந்துகொள்ள வேண்டும். உணர்வாக பேசவில்லை, உணர்வாக தீபம் ஏற்றவில்லை என்பதற்காக, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உணர்வற்றவர்;களில்லை. நாங்கள் உணர்வுடனேயே இருக்கின்றோம்.
 
கடந்த 69 வருடங்களாக நாங்கள்பட்ட அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெறுவதற்கான யதார்த்தமான ஓர் அரசியல் பயணத்தை எமது தலைவர் சம்பந்தான் வகுத்துகொண்டுள்ளார். கடந்த 69 வருடங்களில் பல தமிழ் தலைவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்.

தந்தை -செல்வா மற்றும் அமிர்;தலிங்கம் போன்றோர்; பல ஏமாற்றங்களை கண்டவர்கள். அதற்காக சம்பந்தன், ஏமாற்றப்படமாட்டார் என நான் கூறவில்லை. ஆனாலும்; ஏமாற்றம் வராமல் அரசியல் தீர்;வை பெற்றுக் கொள்வதற்கான இராஜந்திர பயணத்தையே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து வருகின்றது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X