Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
தமிழ், முஸ்லிம் தலைமைகள் இணைந்து அதிகாரப்பகிர்வு யோசனைகளை பொது உடன்பாடொன்றுடன் முன்வைக்க வேண்டிய அவசியம் தொடர்பில் வலியுறுத்தப்பட்டதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தது.
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவச் சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு, எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (16) மாலை நடைபெற்றது.
இதன்போது, அரசியலமைப்பு மாற்றம் மற்றும் அதிகாரப்பகிர்வு குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரப்பகிர்வு வடிவம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
தமிழ், முஸ்லிம் சமூகங்களின் நியாயமான அபிலாஷைகளையும் நலன்களையும் உத்தரவாதப்படுத்தும் பொருட்டு ஆலோசிக்கப்படத்தக்க பல்வேறு அதிகாரப்பரவலாக்கல் வடிவங்கள் தொடர்பிலும் அதன் சாத்தியப்பாடு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
இவ்விரு சமூகங்களின் நியாயமான எதிர்பார்ப்புக்கேற்ப அரசியல் தீர்வு யோசனைகளை முன்மொழியும் அதேவேளை, அது தென்னிலங்கை மக்களின் அங்கிகாரத்துடன் சாத்தியப்படுத்தத்தக்க வகையிலான அணுகுமுறையை தமிழ், முஸ்லிம் தலைமைகள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இச்சந்திப்பின்போது எடுத்துக் கூறியதாக அதன் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இச்சந்திப்பின்போது எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடன் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் அதன் தவிசாளர் அப்துர் ரஹ்மான், பொதுச் செயலாளர் நஜா முஹமட், வட மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago