2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'அனைத்து இன மக்களுக்கேற்ப தீர்வை வழங்க நல்லாட்சி அரசாங்கம் முயற்சிக்கின்றது'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு இனத்திற்கும் அநீதியிழைக்காத வகையில் அரசியல் யாப்பு மாற்றத்தை மேற்கொண்டு, அனைத்து இன மக்களுக்கும் ஏற்புடைய சிறந்த தீர்வினை வழங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது என முஸ்லிம் சமய, கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளரும் ஐ.தே.கட்சியின் கல்முனை தொகுதி பிரசார செயலாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார்.

சாய்ந்தமருது ஐ.தே.க. காரியாலயத்தில் நேற்றுமுன்தினம்  புதன்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலில் தலைமை வகித்து உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;, 'எமது நாடு இன்று எந்த வித பிரச்சினையும் இல்லாமல் நல்லாட்சியூடாக சிறப்பாக வீறுநடை போடுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அனைத்து சமூகங்களினதும் நிம்மதியான சகவாழ்வுக்காக அயராது பாடுபட்டு வருகின்றார்கள்.

ஊழல், மோசடிகள், இன ரீதியான பாகுபாடு, முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் எதுவும் நல்லாட்சியில் கிடையாது. அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்ற நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பி, மக்களின் நலன்;களை உறுதிப்படுத்த நல்லாட்சி அரசாங்கத்தினால் மட்டுமே முடியும்.

இந்த அரசாங்கம்  மூலமாகத்தான் அனைத்து இன மக்களும் திருப்திகரமான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். கடந்த கால ஆட்சியில் அனைத்து இன மக்களும் ஏமாற்றப்பட்டார்கள். குறிப்பாக தமிழ், முஸ்லிம் சமூகங்கள் வஞ்சிக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டிருந்ததை இலகுவில் மறந்துவிட முடியாது.

நீண்டகாலமாக யுத்தத்தினால் அழிந்துபோன தமிழ் பேசும் மக்கள் தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார்கள்;. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக இந்த அரசு முழு அளவில் பங்காற்றி வருகிறது. அதன் பலாபலன்களை அனுபவிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X