Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 24 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வழங்கப்போகும் தீர்வுத்திட்டமென்பது அனைவருடனும் பேசி அனைவரினதும் கருத்துக்களையும் உள்வாங்கி எது நடைமுறைக்கு சாத்தியமான திட்டமோ அந்த திட்டத்தை கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தேசிய அமைப்பாளருமான இரா.துரைரத்தினம் தெரிவித்தார்.
நேற்று (23) மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்களைப் பொறுத்தவரைக்கும் நீண்ட காலமாக பல நம்பிக்கையீனம் இருந்தன. குறிப்பாக 1952ஆம் ஆண்டு டி. எஸ். சேனாநாயக்காவின் தலைமையில் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு, 1962ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்த மூலமாக மலையக மக்களை நாடு கடத்தல் சட்டம், 22.5.1972ஆம் ஆண்டு சிறிவாமோ பண்டாரநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு, 1978ஆம் ஆண்டு ஜே. ஆர் ஜயவர்த்தனவினால் கொண்டு வரப்பட்ட அரசியல் யாப்பு, 19.12.1985 திம்பு மாநாடு, 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம், 1991ஆம் அணைத்துக் கட்சிகளின் மாநாடு 1994இல் சந்திரிகாவின் திட்டம் 2003ஆம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தை, 13.1.2016 நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரதமரின் மும்மொழிவு இந்த வரலாறுகளை பார்க்கும் போது, வடக்கு கிழக்கிலிருந்த தமிழ் கட்சிகள் மேற்கூறப்பட்ட விடயங்களில் தமிழர்களின் நலனுக்காக உழைத்ததுடன் தம்மை அதில் ஈடுபடுத்தினர்.
2014ஆம் ஆண்டுக்கு முற்பட்ட வரலாற்றை பொறுத்த வரையில் வடக்கு, கிழக்கில் பல கட்சிகள் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக போராட்டம் நடத்தியது, பேச்சு வார்த்தை நடத்தியது.
பல விடயங்கள் தோல்வியடைந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை தமிழ் மக்கள் தொடர்பில் பல விடயங்களை கூறியுள்ளன.
இந்த விடயங்கள் தமிழ் மக்களின் வரலாற்றில் எந்தக்காலத்திலும் நடைபெற்றதில்லை. ஆகவே, இது மிகவும் வரப்பிரதாசமாகும்.
இதை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டு இது குழம்பி விடாமல், கடந்த காலத்தில் ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியே பேச்சுவார்த்தை விடயத்தில் அதிகார பரவலாக்கல் விடயத்தில் சம்பந்தப்பட்ட காரணத்தினால் இது குழம்பிப்போயிருந்ததுடன் மறைக்கப்பட்டு தடைவிதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டன.
இன்றுள்ள சூழ்நிலையில் பல கட்சிகள் சேர்ந்து உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்,பு தமிழ் மக்களுடைய கடந்த ஐம்பது வருட வரலாற்றில் கூட்டமைப்பினால் வழங்கப்போகும் தீர்வுத்திட்டமென்பது அனைவருடனும் பேசி அனைவரினதும் கருத்துக்களையும் உள்வாங்கி எது நடைமுறைக்கு சாத்தியமான திட்டமோ அந்த திட்டத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்க வேண்டும்.
அதனை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இதை விட்டு விட்டு தனித்தனியே பேசி கருத்துக்கள் தீர்வுகள் முன்வைக்கப்படுவதென்பது ஏற்புடையதல்ல.
வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒந்றையாட்சியை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சுயாட்சி என்பதை சிங்களவர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
அதிகார பரவலாக்கல் விடயத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஏனையவர்கள் பொது அமைப்புக்கள், மாவட்டங்களிலுள்ள தமிழ் அமைப்புக்கள் குறிப்பாக பேரவைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை இவை அனைத்தும் அதிகார பரவலாக்கல் தொடர்பாக அக்கறையுடன் இருக்கின்றார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பான பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அனைவருமாக சேர்ந்து சுயாட்சிக்கு ஒப்பீடான தீர்வுகளைப் பெறவேண்டும்; பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்பன போன்ற ஆலோசனைகள் அங்கு முன் வைக்கப்பட்டன.
எதிர்காலத்தில் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. பல கட்சிகள் பல தீர்வுத்திட்டங்களை முன் வைத்து வருகின்றன.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல துறை சார்ந்தவர்கள் இருக்கின்றனர். பல அமைப்புக்கள் பல கட்சிகள் உள்ளன. இந்த தீர்வுத்திட்டம் தொடர்பாக ஆலோசனையைப் பெற வரும் குழுவிடம் கருத்துக்களை முன் வைக்க வேண்டும்.
எமது அடிப்படை வடக்கு கிழக்கு இணைப்பாகும். இரண்டாவது சுயாட்சி சம்தப்பட்டதாகும். காணி அதிகாரம், நிலம் அதிகாரம், வரி தொடர்பான அதிகாரம், சர்வதேச உறவுகள் தொடர்பான அதிகாரங்கள் உள்ளடக்கியதான விடயங்களை நாம் அவர்களுக்கு முன்வைக்க வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago