Gavitha / 2016 நவம்பர் 22 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
அனர்த்தத்தினால் பாதிக்கப்படும் குடும்பங்களை பொதுக்கட்டடம் மற்றும் பாடசாலைக்கட்டடம் போன்றவற்றில் தங்க வைப்பதற்கான முன் ஆயத்தங்களைச் செய்து வைக்க வேண்டும் என்று காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம், நேற்றுத் திங்கட்கிழமை (21) நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
'அனர்த்தமொன்று ஏற்படும்போது, அதற்கு ஈடு கொடுப்பதற்கு நாம் அனைவரும் தயாராக இருத்தல் வேண்டும். அதற்கான முன் ஆயத்தங்கள் செய்து வைக்கப்படுதல் அவசியமான ஒன்றாகும். இதன்போது, பொதுமக்களை பாதுகாப்பதும் அவர்களை பாதுகாப்பான கட்டடங்களில் தங்க வைப்பதும் மிக முக்கியமாகும்' என்று அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில், அனர்த்தமொன்று ஏற்படும் பட்சத்தில் கையாளவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்னாயத்த செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025