2025 மே 09, வெள்ளிக்கிழமை

'அபிவிருத்திப் பின்னடைவுக்கு யுத்தத்தை காரணமாகக் கூறுவது சிறந்ததல்ல'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 11 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அபிவிருத்திப் பின்னடைவுக்கு யுத்தத்தை இன்னும் காரணமாகக் கூறிக்கொண்டிருப்பது ஆக்கபூர்வமானது  அல்ல என ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் தெரிவித்தார்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சமூர்த்திப் பயனாளிகளின் பிள்ளைகளுக்கு சுமார் 05 இலட்சம் ரூபாய் செலவில் கற்றல் உபகரணங்கள் இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டன. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், '30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தைப் பற்றியே இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், யுத்தம் முடிவுற்று இப்பொழுது 08 வருடங்களாகியுள்ளன. இந்த யுத்தம் சம்பந்தமான கசப்பான விடயங்களை நாங்கள் மறக்க வேண்டும். அதையே பேசிக்கொண்டிருந்தால் அது எங்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாழாக்கிவிடும்' என்றார்.  

'அணுகுண்டு போடப்பட்டு பேரழிவைச் சந்தித்த பின்னரே  ஜப்பானிய மக்கள் வீறுகொண்டெழுந்து  அபிவிருத்தியில் தன்னிறைவு கண்டனர்;. அவர்கள் ஒருபோதும் மற்றவர்களின் அனுதாபங்களை பெறவில்லை.  நடந்ததை எண்ணி விரக்தி அடையாமல், எதிர்காலத்தை வளமானதாக உருவாக்க புத்தாக்க சிந்தனையுடன் செயற்பட வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சினி முகுந்தன் உட்பட பிரதேச செயலக பெண்கள் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களும் சமூர்த்தித் திட்டப் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X