Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
நல்லாட்சியில் கூட தமிழ்ப் பகுதிகளுக்கான அரசாங்க நியமனங்கள் முஸ்லிம்களாலும் சிங்களவர்களினாலும் நிரப்பட்டு வருவதாக ஆரையம்பதி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் எஸ்.மகேந்திரலிங்கம் தெரிவித்தார்.
நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்த நாட்டில் நல்லிணக்கம் குறைவதற்கு காரணம் சுதந்திரத்தின் பின் இந்த நாட்டை ஆட்சி செய்த அரச தலைவர்களும், அரசியல் வாதிகளுமே காரணம். நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் செய்த தவறுகள் செய்து கொண்டிருக்குதம் தவறுகள் வெளிப்படுத்தப்பட்டு அற்றுக்கு பரிகாரம் காணப்படல் வேண்டும்.
கல்லோயாக் குடியேற்றத்திட்டம் மலையக தமிழரின் குடியுரிமை பறிப்பு என்பவற்றை செய்த இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வந்த எஸ்.டபிள்யு ஆர்.டி.பண்டாரநாயக்க தரப்படுத்தலைக் கொண்டு வந்து எமது மாணவர்களின் கல்வியை பாதிப்புக்குள்ளாக்கிய முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்கா போன்றவர்களை நல்லிணக்கம் குறைய காரணமானவர்களாக எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் உட்பட இவர்களது வாரிசுகளான அரச தலைவர்கள் கடந்த கால தவறுகளை உணர்ந்து கொண்ட போதிலும் அவர்களது பதவி மோகமும் பதவி பறிபோகும் என்ற அச்சமும் இவற்றை திருத்துவதற்கு இடமளிக்க வில்லை.
இதற்கு இன்றைய நல்லிணக்க அரசு இன்றைய ஜனாதிபதியும் பிரதமரும் கூட விதி விலக்கல்ல. இந்த அரச தலைவர்கள் யாருமே தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் முழுமையாக நிறைவேற்றியது கிடையாது. இன்றைய ஜனாதிபதி கூட கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதேபோன்று வடக்கு மக்களின் காணிகளை ஆறுமாதங்களுக்குள் விடுவிப்பேன் எனக் கூறிய வாக்குறுதி போன்ற வைகளை உதாரணமாக குறிப்பிடமுடியும்.
நல்லிணக்கத்தை பாதிக்கும் அரசின் செயல்களாக அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட மாகாண சபைகளுக்கான காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்க மறப்பதும் அற்றை மாகாண சபைகளின் ஆளுநர்கள் மூலம் கட்டுப்படுத்துவதும் அரச கரும மொழிச்சட்டத்தில் இலங்கையில் தேசிய அரச நிர்வாக மொழிகளாக சிங்களம் தமிழ் மொழிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு பல ஆண்டுகளாகியும் இன்று வரை முழுமையாக அமுல் படுத்தப்பட வில்லை.
யுத்தத்தை காரணம் காட்டி வடக்கு கிழக்கு அபிவிருத்தி நிறுத்தப்பட்டிருந்தது. யுத்தம் முடிந்த பின்னரும் இழந்த அபிவிருத்தியை ஈடு செய்யக் கூடிய வகையில் வழங்கள் ஒதுக்கப்பட வில்லை. யுத்த காலத்தில் தமிழர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல என்ற கருத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு அற்றினுள் பெரும்பகுதியான வேலைவாய்ப்புக்கள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது.
யுத்தம் காரணமாக கல்வி பாதிக்கப்பட்ட தமிழரிடையே உயர் பதவிகளுக்கு போதியளவு தகுதியில்லாத தமிழர்கள் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் சிற்றூழியராவதற்கு கூட தகுதியில்லாதவர்களாக தமிழர்கள் இருக்கின்றார்களா
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசின் பங்காளிகளைக் கொண்ட முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நிலையில் எதிர்க்கட்சியினரைக் கொண்ட தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
வடக்கு கிழக்கு மாகாணம் ஒன்றாக இணைக்கப்பட்டு சுயாட்சி வழங்கப்படல் வேண்டும். யுத்த விசாரணை சர்வதேச நீதிபதிகளினால் நடாத்தப்படல் வேண்டும். ஒருபக்கமுள்ள அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படல் வேண்டும். மட்டக்களப்பு மாவட்ட மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப அந்த அதிகாரம் பண்முகப்படுத்தப்படல் வேண்டும்.
ஒவ்வொரு ஊரிலும் தமிழ் பிரதேசங்களில் ஆலயங்கள் சமூக நிறுவனங்களின் சம்மேளனம், முஸ்லிம் பிரதேசங்களில் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் இவற்றுக்கிடையில் கலந்துரையாடல் ஏற்படுத்தப்படல் வேண்டும். அவை ஒரு பக்க சார்பாகவோ அரசியல் அழுத்தங்கள் அற்ற வகையிலோ அவை முன்னெடுக்கப்படவேண்டும். நேருக்கு நேர் கதைக்கும் போது உறவு மேம்படும்'; என்றார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago