2025 மே 08, வியாழக்கிழமை

'அரசாங்கத்துக்கு கால வரையறை வழங்கும் நிலைப்பாடு உருவாகலாம்'

Niroshini   / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

இலங்கை சம்பந்தமாக அமெரிக்காவினால் இம்முறை ஐ.நா.வில் கொண்டு வரப்படும் பிரேரணையானது சர்வதேச விசாரணை எனும் பதத்தில் மென்போக்குக் கடைப்பிடிக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்துக்கு கால வரையறையும் நிபந்தனையும் வழங்குவது போன்ற நிலைப்பாடு உருவாகலாம் என அம்பாறை மாவட்ட மாணவர் மீட்புப் பேரவையின் தலைவர் பொறியியலாளர் கலாநிதி எஸ்.கணேஸ் தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  வெள்ளிக்கிழமை(11)வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அவர் சனிக்கிழமை(12) கருத்து வெளியிடும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

ஆட்சி மாற்றத்தையடுத்து இலங்கை அரசாங்கத்துக்கு சில ஒத்துழைப்புக்களை வழங்கி நிபந்தனையுடனான பூகோள அடிப்படையில் புதிய அரசுக்கு சில காலம் உள்நாட்டுப் பொறிமுறைக்கான வாய்ப்பை வழங்குவதற்கான அவகாசத்தை வழங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா உதவி இராஜாங்கச் செயலாளரின் சந்திப்பிலிருந்து என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது.

இது தவிர அவருடனான சந்திப்பின்போது இலங்கையில் உள்ள நமது தமிழ் மக்களின் பிரச்சினைகள் பலவற்றை முன்வைத்து மட்டுமல்லாது அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள், காணாமல்போனோர் மற்றும் படுகொலை செய்யப்பட்டோர் உள்ளிட்ட விடயங்களை அவருக்கு தெரியப்படுத்தியதுடன் இம்முறை ஐ.நா. சபையில் இலங்கைக்கான சர்வதேச விசாரணையினை ஏற்படுத்தும்படி பாதிக்கப்பட்ட மக்களும் ஒட்டுமொத்த தமிழ் இனமும் வரும்புகின்றது என்பதை அவருக்கு தெளிவாக விளக்கியிருந்தோம்.

எது எவ்வாறாக அமைந்தாலும் நமது மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறான பிரச்சினைகளுக்கு உள்ளக விசாரணை மூலம் தீர்வு காண முற்பட்டு அவற்றுக்கான முடிவு தோல்வியிலேயே முடிவுற்றதனால் உள்ளகப் பொறிமுறையில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதை எம்மால் அறியமுடிகின்றது.

தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டும் வரும் நமது தமிழ் இனத்துக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக் கொடுப்பதும் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள வழியமைப்பதும் காலத்தின் தேவையாகும்.

பல்வேறு இன்னல்களையும் இழப்புக்களையும் சந்தித்த தமிழ் இனத்துக்கு தீர்க்கமான தீர்வும் கண்ணீரைத் துடைக்கும் வகையில் ஐக்கிய நாடுகளின் தலையீட்டுடன் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டியது எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழ்வதற்கு நாம் ஏற்படுத்திக் கொடுக்கம் சிறந்த சந்தர்ப்பமாகவும் இது அமையும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X