2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'அரசாங்கம் பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக பல செயற்றிட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ள போதிலும், பல சவால்களுக்கும் முகங்கொடுத்து வருவதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் வளவியலாளருமான தர்மலிங்கம் தயாபரன் தெரிவித்தார்.

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன்; மட்டக்களப்பு, கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் 'யுத்தத்தின் முன்னரும் யுத்தத்தின்போதும் யுத்தத்தின் பின்னரும் இடம்பெற்ற நிகழ்வுகளின் உண்மையைக் கண்டறிதலின் முக்கியத்துவம்' எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;, 'பெரும்பான்மையினச் சமூகத்தின் மத்தியில் காணப்படும் அச்சமும் சிறுபான்மையினச் சமூகங்களின் ஒத்துழையாமையும் சகவாழ்வுக்கு நிலைமாறுகால நீதிப் பொறிமுறைச் செயற்பாட்டுக்கு சவால்களாக உள்ளன' என்றார்.

'பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரம் என்பவற்றை அடைவதற்காக நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.  பொலிஸ், நீதித்துறை, பொதுச்சேவை என்பவற்றுக்காக ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நல்லிணக்கத்துக்கும் காணாமல் போனவர்களின் விவகாரங்களைக் கையாள்வதற்கும் அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும், காணாமல் போனோர் பற்றி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மெதுவாகவேனும் மீள்குடியேற்றம் இடம்பெறுகிறது. இராணுவ முகாம்கள் சில பகுதிகளில் மூடப்பட்டுள்ளதுடன், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களும் ஓரளவுக்கு  விடுவிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களது உரிமைக்கான அங்கிகாரம், குடிமக்களினுடைய நம்பிக்கைச் சட்டம் மற்றும் ஐனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த உதவும்' என்றார்.

'இதேவேளை, பொறுப்புக்கூறும் விடயத்தில் பல தடைகளையும் சவால்களையும் அரசாங்கம் எதிர்கொண்டு வருவதையும் நாம் அவதானிக்கிறோம். நிலைமாறுகால நீதிப் பொறிமுறை பற்றி மக்களிடம் தெளிவான செயல்முறை மற்றும் புரிதல்கள் இல்லை' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X