Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 16 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
அரசியல் அதிகாரம் என்பது சக்கரம் போன்றது. இன்று அதிகாரத்தில் இருப்பவர்களின் பதவிகள் நாளை பறிபோகலாம். அதேவேளை, இன்று அதிகாரமின்றி இருப்பவர்களுக்கு நாளை அதிகாரம் கிடைக்கலாமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
சமூக நல்லிணக்கத்துக்கும்; வலுவூட்டலுக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் கல்வியாளர்களைக் கௌரவித்து பரிசுகள் வழங்கும் நிகழ்வு, ஏறாவூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'அதிகாரத்தை கண்ணியமாகவும் கவனமாகவும் பயன்படுத்தி எம்மால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். இதனை முதலமைச்சர் புரிந்துகொண்டால் அவருக்கு அது நற்பெயரைக் கொண்டுவரும். இல்லையேல் சரித்திரம் அவரை தூற்றிப்பேசும்.' என்றார்.
'கிழக்கு மாகாண முதலமைச்சர் அராஜக ஆட்சி செய்ய நினைக்கின்றார். அவரின் நடவடிக்கைகளுக்கு சில அதிகாரிகளும் துணை போவதையிட்டு கவலையடைய வேண்டியுள்ளது' மக்கள் வெறுக்கின்ற அளவுக்கு அநாகரிக அரசியல் செய்யும் முதலமைச்சர் அந்தப் போக்கிலிருந்து விடுபட்டு ஒரு முன்மாதிரியான அரசியலைச் செய்ய முன்வரவேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
4 hours ago