Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வையும் அபிவிருத்திகளையும் முன்னெடுக்க வேண்டிய நிலைமையிலுள்ளது என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இதன் காரணமாக இந்த அரசாங்கத்துக்கு தாம் மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதுடன், கடந்த யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் தாம் இயன்றவரையில் முயற்சி செய்துவருவதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு, பெரிய போரதீவு பாரதி முன்பள்ளிக்கு சுற்றுமதில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'யுத்த சூழல் காரணமாகப் பாதிக்கப்பட்ட எமது பிரதேசங்களை வளப்படுத்த வேண்டியுள்ளது. எனவே, கிராமங்களிலுள்ள இளைஞர் கழகங்கள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து கிராமங்களில் செய்யவேண்டிய அபிவிருத்திகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திட்டங்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளாகிய எமக்குத் தெரியப்படுத்துங்கள். அவ்வாறான செயற்றிட்டங்களுக்கு எங்களாலான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நாம் தயாராகவுள்ளோம்' என்றார்.
'மேலும் அரசாங்க உதவித் திட்டங்கள், கொடுப்பனவுகள் உட்பட இதர உதவிகள் மக்களுக்கு வழங்கும்போது, அவற்றில் அரசாங்க அதிகாரிகளோ அல்லது ஏனைய உத்தியோகஸ்தளோ பாராபட்சம் காட்டி நடந்தால், அவை தொடர்பில் உடனடியாக எமக்குத் தெரியப்படுத்துங்கள். நாம் அவற்றை நிவர்த்தி செய்வோம்' எனவும் அவர் மேலும் கூறினார்.
15 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
29 minute ago
35 minute ago