Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
இன ஒற்றுமையை இன்னும் இறுக்கமாக ஏற்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் ஓரணியில் இணைய வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான சேவைகளினூடாக மனிதநேயப் பணி அமைப்பின் ஐந்தாவது வருட நிறைவையொட்டி ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'ஆயுத வன்முறைகள் இடம்பெற்ற காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சமூகமானது தமது ஆயிரக்கணக்கான ஏக்கர் பூர்வீகக் காணிகளை கைவிட்டு உயிருக்கு அஞ்சி நகரப் பகுதிகளுக்குச் சென்றார்கள்.
இப்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஒட்டுமொத்த நிலப்பரப்பு சுமார் 20 சதுர கிலோமீற்றர் மாத்திரமே. ஆனால், மட்டக்களப்பு மாவட்டம் சுமார் 1,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பரந்த பிரதேசமாகும்.
எனவே, வாழ்வதற்கு ஒரு துண்டு நிலம் இல்லாமல், சன அடர்த்தியால் அவதியுறும் காணியற்ற முஸ்லிம்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச காணிகள் இன விகிதாசாரத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இது இனங்களுக்கிடையிலான சகவாழ்வுக்கும் அபிவிருத்திக்கும் நீடித்த சமாதானத்துக்கும்; வழிவகுக்கும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025