2025 மே 07, புதன்கிழமை

'அறிகுறி தென்பட்டவுடன் வைத்தியசாலைக்கு விரையுங்கள்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பாரிசவாதத்துக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று விடவேண்டும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் டொக்டர் ஆர்.ரமேஸ் தெரிவித்தார்.

உலக பாரிசவாத தினத்தையொட்டி நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பாரிசவாதம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் பிரிவின் ஏற்பாட்டில் நரம்பியல் வைத்திய நிபுணர் டொக்டர் ரி.திவாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய டொக்டர் ரமேஸ்,
பாரிசவாதம் ஏற்பட்டு நான்கு மணித்தியாலங்களுக்குள் இங்கு கொண்டு வந்தால் அதனை கண்டு பிடித்து மருந்துகளை கொடுத்து அதனை சுகப்படுத்த முடியும்.

நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களினாலும் இந்த பாரிசவாதம் ஏற்படுகின்றது.

முகம் ஒரு பாதி செயழிழந்து போய் காணப்படுதல், ஒரு கையும் ஒரு காலும் இயங்காமல் விடுதல், பேச்சில் குழறல் ஏற்படுதல் போன்ற அறிகுறிகளை கண்டவுடன் வைத்தியசாலைகளுக்கு சென்றுவிட வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X