2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'அல்குர்ஆன் விளக்கவுரையை சிங்கள மொழியிலும் வெளியிடவுள்ளேன்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சர்வதேச ரீதியிலான சிக்கல்களை விளங்கிக்கொண்டு பல்வேறு வகையிலான சமூகவியல் சிந்தனைகளின் பின்னணியிலிருந்து அல்குர் ஆன் பார்க்கப்படுவது அவசியமாகும் என உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்ஸுர் நழீமி தெரிவித்தார்.

காத்தான்குடி சமாதான ஒன்றியம் ஏற்பாடு செய்த உஸ்தாத் மன்ஸூர் எழுதிய குர்ஆனிய சிந்தனை தப்ஸீர் நூல் வெளியீட்டு விழா  றாபிதத்தூன் நளீமிய்யீன்  தலைவர் எஸ்.ஏ.கே. அப்துர் றாசீக் (நளீமி) தலைமையில் சனிக்கிழமை (17) இரவு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அல்குர்ஆனுக்கான விளக்கவுரைகள் காலத்துக்கு காலம் சூழல், சமூகம் பிரச்சினைகளுக்கு ஏற்ப நிச்சயமாக பார்க்கப்பட வேண்டும்.

பிரச்சினைகள் மற்றும் சமூக மாற்றத்துக்கேற்ப குர்ஆன் மீள் வாசிப்பு எப்போதும் தேவையாக உள்ளது.

அந்த பின்னணியில்தான் நவீன தப்பஸீர்களைக் கொண்டு எங்களது சமூக பின்னணியைக் கொண்டு இந்த தப்சீரை விளக்கவுரையை நான் எழுதியுள்ளேன்.

மேலும்,அல்குர்ஆன் விளக்கவுரையை சிங்கள மொழியிலும் வெளியிடவுள்ளேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X