Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
30 வருடகாலமாக இடம்பெற்ற ஆயுத வன்முறை அழிவுகளை ஈடுசெய்வதாயின், தமிழ் பேசும் சமூகங்கள் இணைந்து அறிவின் சிகரத்தைத் தொடவேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரவித்தார்.
ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 13 மணாவர்களை பாராட்டும் நிகழ்வும் ஓய்வுபெற்றுச் செல்லும் ஆசிரியை ஒருவருக்கான பிரியாவிடை நிகழ்வும் இன்று திங்கட்கிழமை அப்பாடசாலையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற வன்முறைகள், போராட்டங்கள், எதிர்ப்புகள் காரணமாக தமிழ் பேசும் சமூகங்கள் கல்வி உட்பட இழந்தவைகள் ஏராளம். உயிரிழப்பைத் தவிர மற்றைய எல்லா இழப்புக்களையும் ஈடுசெய்வதாயின், நாம் உள்நாட்டுப் போரின் விளைவாக இழந்த கல்வியை முழுமூச்சாக நின்று மறுசீரமைக்க வேண்டும்.
எங்களுக்குக் கிடைக்க வேண்டிய அபிவிருத்திகளை தென்பகுதிக்கு அபகரிப்பதுதான் நாம் போர் முடிந்த பின்னரும் பின்னடைவு கண்டதற்கான காரணமாகும். வடக்கு, கிழக்கு மாகாணங்களின்; பொருளாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு என சகல அபிவிருத்தி வளங்களும் இனவாதிகளால் திட்டமிட்டு சூறையாடப்பட்டு வந்துள்ளன.
போர், சூறாவளி, சுனாமி, இன்னும் வறட்சி, பெருவெள்ளம் போன்றவற்றுக்காக வடக்கு, கிழக்கிலுள்ள எமக்கு உலக நாடுகளிடம் இருந்து கிடைத்த உதவிகளை தென்பகுதி சுயநலமி அரசியல்வாதிகள் சுருட்டிக்கொண்டு தமது பகுதிகளை அபிவிருத்தி செய்த காலம் கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் மாறிவிட்டிருக்கின்றது. இப்பொழுது எங்களையும் ஏறெடுத்துப் பார்க்கத் துவங்கியிருக்கின்றார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக எமது போராட்டத்திற்கான ஒரு நிரந்தரத் தீர்வை நாடி நகர்வுகள் இடம்பெறுகின்றன. அதனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். எமது நாட்டிலே சிறுபான்மை இனங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு சமஷ்டி முறையினூடான நல்லாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும். அதனூடாக எங்களை நாங்களே ஆட்சி செய்து எங்களது பிரதேசத்தை நாங்களே அபிவிருத்தி செய்யக் கூடிய ஒரு நிலைமை ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு அதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்'; என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025