Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
ஒரு பிள்ளை தனது குடும்பத்துடன் பழகும் நேரத்தை விட அதிகமாக பாடசாலைச் சமூகத்துடனேயே இருக்கின்றது. அந்தவகையில், ஆசிரியர்கள் அதிக நேரம் செலவு செய்து அவர்களின் எண்ணத்துக்கும் விருப்புக்கும் ஏற்ற நிலையில் கற்பித்துக் கொடுத்து சரியான நிலமைக்கு ஒரு மாணவனை கொண்டு வருவது மிகவும் கஷ்டமான காரியம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்த தெரிவித்த விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், இப்பரீட்சை வெறும் ஒரு போட்டிப்பரீட்சையைப் போன்றது.
ஐந்தாம் ஆண்டு என்பது பத்து வயதுள்ள மாணவர்கள். சரியான பக்குவம் இல்லாத மாணவர்களை இந்நிலமைக்குக் கொண்டுவருவதென்பது முடியாத காரியம். ஆனால் அதனை முடித்துக் காண்பித்துள்ள அந்த ஆசிரியர்களை நான் கட்டாயம் பாராட்டியே தீரவேண்டும்.
எனவே இதில் சித்திபெறவில்லை என்று எந்த மாணவர்களும் கவலையடைய தேவையில்லை. நீங்கள் எதிர்நோக்கும் சாதாரணா தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை சரியாக முறையில் முகம்கொடுத்து செய்கின்றபோதுதான் உயர்நிலைக்குச் செல்வீர்கள்.
எனவே, இப்பரீட்சை மூலம் உங்கள் குழந்தை வெற்றி பெறவில்லை என்பதற்காக அவர்களைக் கண்டித்துப் பேசுதல் கட்டாயம் தடுக்கப்படவேண்டியது. அது சிறுவர் துஷ்பிரயோகத்துக்குள்ளான குற்றம்.
எனவே உங்கள் பிள்ளைகளுடன் நல்ல முறையில் ஆறுதலான வார்த்தைகள் பேசி அவர்களுடன் அன்பாக ஆலோசனை வழங்கி அடுத்தடுத்து வரும் பரீட்சைகளை சரியாகச் செய்யவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
1 hours ago
2 hours ago