Niroshini / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க் கட்சி தலைவராக தெரிவு செய்யப்படும் அளவுக்கு ஆட்சியில் உள்ளவர்களின் உள்ளங்கள் மாறியிருக்கின்றன என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழ் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் திணைக்களங்களின் முன்னேற்றங்களை பரிசீலிக்கும் நிகழ்வுத் திட்டத்தில் நேற்று புதன்கிழமை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு விஜயம் மேற்கொண்டு அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று நாட்டில் நல்லாட்சியில் ஏற்பட்டுள்ள கூட்டாட்சியை முதன் முதலில் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டவர்கள் கிழக்கு மாகாண சபையின் தற்போதைய ஆட்சியாளர்களாகிய நாங்கள் தான்.
இன்று கிழக்கு மாகாண சபையில் எதிர்க் கட்சியில் இருப்பவர்களும் ஆளுந்தரப்போடு சேர்ந்து வேலை செய்யக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கூட்டாட்சியில் இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியாவிட்டால் இனி ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்.அந்தளவுக்கு நாட்டில் தற்போது நல்லாட்சி நிலவுகின்றது என்றார்.
மேலும்,எதிர்காலத்தில் கோறளைப்பற்று பிரதேச சபை நகர சபையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் பிரதேச சபைக்கான ஆளனிப் பற்றாக்குறைகளும் நிவர்த்தி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

25 minute ago
39 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
39 minute ago
4 hours ago
4 hours ago