2025 மே 07, புதன்கிழமை

“ஆன்மீகக்கல்வியையும் உலகக்கல்வியையும் கற்பது காலத்தின் தேவையாகும்”

Niroshini   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஆன்மீகக்கல்வியையும் உலகக்கல்வியையும் கற்பது இன்று காலத்தின் தேவையாகுமென காத்தான்குடி காதிநீதிபதியும் மட்டக்களப்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவருமான மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி தெரிவித்தார்.

காத்தான்குடி ஜாமிஅதுஸ் ஸித்தீக்கிய்யா பெண்கள் அரபுகல்லூரியின் 20ஆவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

இன்று உலக கல்வியுடன் மார்க்க ஆன்மீக கல்வியையும் கற்பது அவசியமாகும்.

அதே போன்று ஏனைய மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்.பிற மொழிகள் என்பது இன்று அவசியமாகி வருகின்றன. நாம் பேசும் தமிழ் மொழியுடன் அரபு மொழியையும் கற்கின்றோம். இந்த மொழிகளுடன் ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழிகளையும் கற்பது இன்று காலத்தின் தேவையாகவுள்ளது.

காத்தான்குடியிலுள்ள இந்த ஜாமிஅதுஸ் ஸித்தீக்கிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியானது முழு இலங்கை முஸ்லிம்கள் மத்தியிலும் சிறந்ததொரு பெண்கள் கலாசாலையாக திகழ்ந்து வருகின்றது. இங்கு கல்வி கற்று வெளியேறியுள்ள மௌலவியாக்களில் பலர் சிறந்த பதவிகளில் இன்றுள்ளனர்.

ஒழுக்கமும் பண்பாடும் நிறைந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் அறிவுத்துறையை விருத்தி செய்வதற்கும் இவ்வாறான கலாசாலைகள் முக்கிய இடத்தினை வகிக்கின்றன என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X