Niroshini / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஏறாவூர் ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலையில் பஞ்சகர்ம பிரிவை ஆரம்பிக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் வெண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும்,தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இவ்வைத்தியசாலையின் சேவையைப் பெற்றுக் கொள்ள பதுளை,உன்னிச்சை, கரடியணாறு, கோப்பாவெளி, வாகரை வாழைச்சேனை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை ஆகிய தூர பிரதேசங்களிலிருந்து மக்கள் வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வைத்தியசாலையில் பஞ்சகர்ம பிரிவு இல்லாதது குறைபாடாக உள்ளது.
மாவட்ட ஆயர்வேத வைத்தியசாலையாக இருந்தும் கூட இப்பிரிவு இல்லாததால் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே, இம்மக்களின் எதிர்கால நலன்கருதியும் ஆயர்வேத வைத்தியமுறையை மேம்படுத்தும் முகமாகவும் ஏறாவூர் ஆயர்வேத மாவட்ட வைத்தியசாலையில் பஞ்சகர்ம பிரிவை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 minute ago
16 minute ago
17 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
17 minute ago
22 minute ago