Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியில் இன்று (28) அதிகாலை வேளையில் திடீரென ஏற்பட்ட இடி, மின்னல் காரணமாக 7 வீடுகளில் மின்மானிகள் பழுதடைந்ததாக இலங்கை மின்சார சபையின் காத்தான்குடிப் பிராந்திய காரியாலய மின் அத்தியட்சகர் எம்.ஐ.நௌபல் தெரிவித்தார்.
அத்துடன், காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியை அண்டி அமைந்துள்ள வீடொன்றில் இடி விழுந்ததுடன், அவ்வீட்டில் மின்னலும் தாக்கியுள்ளது. இதனால், அவ்வீட்டுச் சுவர்களில் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன், குளிரூட்டி, மின்மானி ஆகியவை பழுதடைந்துள்ளன.
மேற்படி வீடுகளில் மின்மானிகள் பழுதடைந்தமை தொடர்பில் தமது அலுவலகத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து, அவற்றைச் சீர்செய்வதற்கான நடவடிக்கையில் தமது அலுவலக உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .