Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்;களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தை நாளை திங்கட்கிழமை முதல் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி சிறுவர் பாதுகாப்பு, சமூக அபிவிருத்தி மன்றக் கூட்டம், பிரதேச செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்துக்காக கிராம உத்தியோகஸ்தர்;கள், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், கல்வி அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான பூரண ஒத்துழைப்பை சமூக பாதுகாப்பு, சமூக அபிவிருத்தி மன்றம் வழங்கும். அத்துடன், பாடசாலைகளுக்குச் செல்லாமல் வீடுகளிலிருக்கும் விசேட தேவையுடைய மாணவர்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை மீண்டும் பாடசாலைகளில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், இடைவிலகிய மாணவர்களுக்கு தலா 2,500 ரூபாய் செலவில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுமென இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில் இதுவரையில் காத்தான்குடிப் பிரதேசத்தில் இடைவிலகிய 04 மாணவர்களை அடையாளம் கண்டு, மீண்டும் பாடசாலைகளில் இணைத்துள்ளதாக சிறுவர்; மேம்பாட்டு உத்தியோகஸ்தர் எஸ்.சத்தியநாதன் தெரிவித்தார்;.
15 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
29 minute ago
35 minute ago