Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 10 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
தமிழ் முஸ்லிம் மக்களிடையே கடந்த காலங்களில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை மறந்து மொழியால் ஒன்றுபட்ட இரு சமூகங்களும் இணைந்து செயற்பட்டால் இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு இணையாக உரிமைகள் நீதி, நியாயங்களை பெற்றுக்கொள்ள முடியும் என தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் எக்ஸ்பிரஸ் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை(08) நடைபெற்ற பரிசளிப்பு விழவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசியல் போராட்டத்தின் மூலம் எமது உரிமைகளை வென்றெடுக்க கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். சாத்வீகப் போராட்டத்திலிருந்து ஆயுதப் போராட்டம் வரை தமிழ் மக்களோடு முஸ்லிம் மக்கள் கைகோர்த்துச் செயற்பட்டதை யாரும் மறக்க முடியாது.
கடந்த கால வரலாற்றில் சில கசப்பான அனுபவங்களும் சில பிரிவுகளும் இடம்பெற்றது உண்மை. அவற்றை நாம் மறந்து மொழியால் ஒன்றுபட்டிருக்கின்ற தமிழ், முஸ்லிம் என்ற உறவு நீடிக்க வேண்டும்; என்றார்.
மேலும்,கடந்த காலங்களில் தமிழ் முஸ்லிம்களுக்குள் இருந்த கசப்பான நிகழ்வுகளை மறந்து இரண்டு இனங்களும் ஒருதாய் பெற்ற பிள்ளைகள் போல் தொடர்ந்து செயற்பட வேண்டும்.
தமிழ், முஸ்லிம் உறவுக்கு எடுத்துக்காட்டாக கிழக்கு மகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இணைந்து ஆட்சியமைத்துள்ளார்கள். இந்த நல்லுறவு பிரிவினைவாத சக்திகளால் முடக்கப்பட்டுவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
52 minute ago
1 hours ago