Niroshini / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்
பயணிகள் தற்போது இணையத்தளத்தினூடாக போக்குவரத்து சீட்டுக்களை முன்பதிவு செய்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில்,மட்டக்களப்பு மாவட்ட புகையிரத நிலையங்களிலும் இந்த வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலுள்ள குறைபாடுகளை நிலைய அதிபர்களுடன் ஆராயும் கூட்டம் சனிக்கிழமை (10) புகையிரத நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
போரினால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட வடபகுதிக்கு கிழக்கு மற்றும் தெற்கை விட புகையிரத சேவை வசதிகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் மதுப்பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சமூக சீரழிவுகள் அதிகம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காததனால் அதிக விபத்துக்கள் நடைபெறுகின்றன.
நாம் சட்டத்துக்கு அடிபணிந்து அதை மதிக்கும் நாகரீகமான மனிதர்களாக மாறவேண்டும் என்றார்.
இதில்,மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், பிரதி இயக்க அத்தியட்சகர் வி.எஸ். பொல்வத்தகே, பாதைகள் பிரதம பொறியியலாளர் ஜே.உதயகுமார், அமைச்சின் செயலாளர் நிகால் சோமசந்திர, பிரத்தியேகச் செயலாளர் ஏ.டி.டி.எஸ். இந்திரசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.
16 minute ago
34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
34 minute ago
1 hours ago
2 hours ago