Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
'தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை அங்கிகரிப்பதற்கு இந்திய அரசாங்கம் முன்வர வேண்டும் என்பதுடன், தமிழ் மக்களை கருவியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு எண்ணக்கூடாது' எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
'தமிழ் மக்களின்; நலன்களை இந்திய அரசாங்கம் பேண முற்படும்போது, நாங்களும் இந்திய அரசாங்கத்தின்; நலன்களுக்கு மதிப்பளித்து, அவர்களுடன் ஒத்துழைத்து செயற்படுவதற்குத் தயங்கமாட்டோம்' எனவும் அவர் கூறினார்.
அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவுதினம், தமிழ்த்; தேசிய மக்கள் முன்னணிக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, நாவலடியில் அமைக்கப்பட்டுள்ள அவரது சமாதிக்கு அருகில் சனிக்கிழமை (22) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
'தமிழர்களை இந்தியா கைவிட்டதால், அன்று தொடக்கம் இன்றுவரை தமிழர்கள் உரிமைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம்' எனவும் அவர் கூறினார்.
'மேலும் எங்களின் உரிமைக்காக, எங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போரடி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதிக்கு நினைவு கோர வேண்டிய கடைப்பாடு தமிழர்களாகிய எங்கள் எல்லோருக்கம் இருக்கின்றது' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .