Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
யுத்தம் முடிந்த பின்னர்; வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களும் தமிழர்களும் இன, மத வேறுபாடுகளின்றி வாழ்ந்துவரும் நிலையில், இனக்குரோதமான கருத்துகள் வெவ்வேறு பிணக்குகளை எற்படுத்தக்கூடியதாக அமையுமென காத்தான்குடி சமூகத்தின் வட்ஸப் குழுமத்தின் பணிப்பாளர் ஏ.எம்.பர்சாத் தெரிவித்தார்.
நல்லிணக்கப் பொறிமுறைக்கான பொதுமக்களிடம் கருத்தறியும் அமர்வு மட்டக்களப்பு, மண்முனை வடக்குப் பிரதேச செயலக மண்டபத்தில்; சனிக்கிழமை (13) நடைபெற்றது.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'முஸ்லிம்கள் தீர்;வு மட்டத்திலும் சரி, பேச்சுவார்த்தையிலும் சரி மூன்றாம் தரப்பாகவே காணப்படுகின்றனர். முஸ்லிம்களை மூன்றாம் தரப்பாகக் கொள்ளக்கூடாது. தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களும் ஒரு தரப்பாக கொள்ளப்பட வேண்டும்.
தங்களின் ஆதங்கங்கள், தங்களின் தேவைகளை முன்வைக்கக்கூடிய அழுத்தமாகப் பிரயோகிக்கின்ற சபையில் தங்களுக்கென்று ஓர் இடத்தை முன்வைக்கின்ற தரப்பாக முஸ்லிம்கள் இணைக்கப்பட வேண்டும்' என்றார்.
'முஸ்லிம்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தரப்பென்ற அடிப்படையில் அவர்களும் உள்வாங்கப்பட வேண்டும். யுத்த காலத்தில் கடும் போக்கான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாத முஸ்லிம் சமூகம், யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளமை உண்மையாகும்.
1990ஆம் ஆண்டு குருக்கள்மடத்தில் கடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு என்ன நடந்ததெனக் கண்டறியப்பட வேண்டும். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் கருணா, பிள்ளையான் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அத்துடன், 1990ஆம் ஆண்டு காத்தான்குடிப் பள்ளிவாசலில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் புலிகளின் அப்போதைய தளபதியான கருணா, பிள்ளையான் ஆகியோர் விசாரணை செய்யப்பட வேண்டும்' என்றார்.
'குருக்கள்மடத்தில் கடத்தப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழிகள் தோண்டும் விடயம் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது. முஸ்லிம் அரசியல் தலைமைகளால் இந்த விடயம் சாதிக்க முடியாததாக இருக்கின்றது. இதைப் பொது விடயமாகக் கையாளவேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை இந்தச் செயலணி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென்பது எமது வேண்டுகோளாகும்' எனவும் அவர் கூறினார்.
14 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago
34 minute ago