Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 12 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணி அபகரிப்புப் பிரச்சினை முடிவுக்குக் கொண்டுவராதவரை நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டினை ஏற்படுத்த முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
மட்டக்களப்பு உறுகாமம் சுபைர் ஹாஜியார் வித்தியாலயத்தில் கணனி வழங்கும் நிகழ்வு புதன்கிழமை(11) நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வித்தியாலய அதிபர் ரி.எம்.கஸ்ஸாலி சாகீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,அவர் மேலும் கூறுகையில்,
இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு சகலரும் சந்தோசமாக வாழக்கூடிய சூழல் ஏற்பட்டிருந்தாலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபகரிக்கப்பட்ட காணிகள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையே இருக்கின்றன. வட மாகாணத்தில் இராணுவத்தினரின் பிடியிலிருந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் எல்லை புறங்களில் பெரும்பான்மை இனத்தவரை குடியேற்றும் நோக்குடன் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில்; எல்லைப்புறங்களில் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பெரும்பான்மை இனத்தவர் பயிர்செய்கை மேற்கொள்கிறார்கள்.
யுத்த சூழலின் போது சிறுபான்மை மக்களிடையே உருவான காணிப் பிரச்சினை நியாயமாகத் தீர்க்கப்பட வேண்டும். இந்த விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago