2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

'இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி அரசாங்கம் நகர்கின்றது'

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இனப் பிரச்சினைக்காக தீர்வை நோக்கி நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கம் நகர்ந்துகொண்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு லேக் வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை சிரமதானப்பணியை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நாட்டின் தேசிய நல்லாட்சி அரசாங்கம் இரண்டு முக்கிய கட்டங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதிலும் நாட்டை அபிவிருத்தி செய்வதிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது' என்றார்.

'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த நல்லாட்சி தேசிய அரசாங்கம் இனப் பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்தில் கூடிய அக்கறையுடன் செயலாற்றுகின்றது. இதில் அனைவரும் ஒன்றுபட்டு இனப் பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்துவதில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.

'மேலும், எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்குள் பத்து இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் ஒருவருட காலத்தினுள் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளோம். கிழக்கு மாகாணத்தில் மூன்று இலட்சம் பேர் வேலை இல்லாமலுள்ளனர்' எனவும் அவர் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X