Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
'இருப்பைத் தக்கவைப்பதற்காக இளைஞர்கள் மத்தியில் எமது பண்பாடுகளை தெளிவுபடுத்த வேண்டும். அந்தப்பணியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எம் எல்லோருக்கும் இருக்கிறது' என கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
மட்டக்களப்பில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாத் தொடர்பான ஏற்பாட்டுக் கூட்டம், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'எங்களுடைய பண்பாடு, எங்களுடைய இருப்புகளுக்கு இந்தப் பண்பாட்டு விடயங்களை வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. சில வேளைகளில் எமது இருப்புகள், சவாலாக்கப்படுகின்றன. ஆகவே, இந்த விடயங்கள் தொடர்பாக அடிக்கடி கலந்துரையாடிக்கொண்டே இருக்க வேண்டும்' என்றார்.
இன்றைய காலகட்டத்தில் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பல்வேறு மட்டத்தில் இருந்து பார்க்கும்பொழுது, எங்களுக்கு இருக்கக்கூடிய அழுத்தங்கள் குறிப்பாக, இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள், தமிழ் பேசக்கூடிய மக்களுக்கு இருக்கின்ற அழுத்தங்களை வைத்துப் பார்க்கும்போது நாம் விழிப்பாக இருக்க வேண்டி உள்ளது.
எங்களுடைய விடயங்களை, எங்களுடைய பெருமைகளை, எங்களுடைய ஆற்றல்களை, எங்களுடைய சாதனைகளை நாங்கள் எங்களுடைய இளையவர்களுக்கு கேட்க கூடியவதாக சொல்ல வேண்டும். அந்த வகையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண இலக்கிய விழாவை மிகவும் சிறப்பாக நடத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
தமிழ் இலக்கிய விழாவில் ஆய்வரங்கு, பண்பாட்டுக் கலை நிகழ்வுகள், வித்தகர் விருது, இளம் கலைஞர்கள் கௌரவிப்பு, மலர் வெளியீடுகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
14 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago
34 minute ago