Suganthini Ratnam / 2016 நவம்பர் 17 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
சிறுபான்மையினச் சமூகங்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தும் பிக்குகளின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமாயின், சிறுபான்மையினச் சமூகங்கள்; இணைந்திருக்க வேண்டும் எனக் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்துக்கான விசேட திட்டங்கள் வரவு -செலவுத்திட்டத்தின் மூலம் உள்வாங்கப்பட்டுள்ளது தொடர்பிலும் அவர் வரவேற்பு தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா புதன்கிழமை (16) மாலை சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் நாடாளுமன்றத்தை அரசியல் சபையாக மாற்றி புதிய யாப்பு உருவாக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வேளையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்; மட்டுமன்றி, தெற்கிலும் இந்த யாப்பு உருவாக்கப்படுவதை விரும்பாத சில தீயசக்திகள் மக்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தி எதிர்காலத்தில் ஸ்திரத்தன்மையைக் குழப்பும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
மூவினங்களும் வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில்; ஒரு சில தீயசக்திகள், காணிகளை அபகரிப்பதிலும் குடியேற்றங்களைச் செய்வதிலும் ஈடுபட்டு வருகின்றன' என்றார்.
'இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின்; ஊடாக உருவாக்கப்பட்ட மாகாணசபைக்கு காணி அதிகாரங்கள், பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள சிறுபான்மையின மக்கள் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்தினார்களோ, அதேபோன்று இணைந்த வடகிழக்குக்குள் எங்களுக்கு உள்ள அதிகாரங்களை நாங்கள் பகிர்ந்துகொண்டு, எங்களின் பிரதேசங்களை நாங்கள் காப்பாற்ற வேண்டும். நாங்கள் ஒன்றுபட்டுச் செயற்படாவிடின், கிழக்கு மாகாணத்தைப்; பறிகொடுக்கும் நிலைமை ஏற்படும்' எனவும் அவர் கூறினார்.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025