2025 மே 08, வியாழக்கிழமை

“இறைவனின் திருப்தியை எதிர்ப்பார்க்க வேண்டும்”

Niroshini   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இறைவனின் திருப்தியை எதிர்ப்பார்த்தே நாம் நமது அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற புனித ஹஜ் கடமைக்காக செல்வதையிட்டு நடைபெற்ற பிரியாவிடை வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சமூக சேவைகள் செய்யும் போது மனிதனின் திருப்தியை நாடிச் செய்யாமல் இறைவனின் திருப்தியை நாடி செய்ய வேண்டும்.

சமூக சேவையில் ஈடுபடும் ஒருவர் தான் செய்யும் சமூக சேவைக்கு மனிதர்களிடத்தில் இருந்து பிரதி உபகாரத்தை எதிர்பார்க்க கூடாது.மாறாக இறைவனின் திருப்தியை நாடி சமூக சேவையை செய்ய வேண்டும்.

நபி இப்றாஹீம் அவர்கள் அவர்களின் குடும்பம் செய்த தியாகத்தை இந்த ஹஜ் வணக்கம் வலியுறுத்தி நிற்கின்றது என்றார்.

இந்த வைபவத்தில், காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் மௌலவி எம்.சி.எம்.றிஸ்வான் மதனீ,உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவாராசா ஆகியோரும் உரையாற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X