Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன், வா.கிருஸ்ணா, பேரின்பராஜா சபேஷ், கனகராசா சரவணன்
மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியானது தொடர்ந்து தனது முழுமையான ஆதரவை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பு அமெரிக்கமிஷன் மண்டபத்தில் சனிக்கிழமை (29) மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெரியப்படுத்தும் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோதுஇ'புதிய அரசியலமைப்பு நில மீட்பு காணாமல் போனோர் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை விவகாரங்கள் உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஆராயப்பட்டதுடன்இ இலங்கை தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும் அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளோம்.
படையினர் வசமுள்ள காணிகள் தனியார் காணிகள் மக்கள் பாவனையிலுள்ள அரசாங்கக் காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துதல் நீண்டகாலமாக இருந்துவரும் வவுனியா வடக்கு உள்ளூராட்சிமன்ற எல்லை சம்பந்தமாக தீர்வைப் பெறுதல்
பிரதேச செயலகங்களிலுள்ள தரவுகளின்படி புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் பொருளாதாரம் அரசியல் வாழ்க்கை மற்றும் வேலைவாய்ப்பு பற்றி தீர்மானம் மேற்கொள்ளல்
வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட நிலையில்இ பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் ஏராளமாக இருக்கின்றன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளன' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .