Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
இலங்கையில் சுமார் 40 ஆயிரம் சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது என மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.புவிராஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பயனியர் வீதியை அண்டி அமைந்துள்ள மதர்ஸ் கெயார் முன்பள்ளியின் வருடாந்த உடல் திறனாய்வுப் போட்டி, மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி உள்ளக அரங்கில் சனிக்கிழமை (8) மாலை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'இலங்கையில் 15 சதவீதமான சிறுவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார்கள். இதேவேளை, 15 சதவீதமான சிறுவர்கள் நீரிழிவு நோய்க்கு உள்ளாகியுள்ளார்கள்.
13 வயது முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களில் 11 சதவீதமான சிறுவர்கள் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள்.
இலங்கையில் திருமண வயதை எட்டியுள்ள பெண்களில் 6 சதவீதமானவர்கள் திருமணத்துக்கு முன்னரே கர்ப்பம் தரிக்கின்றார்கள். நாளாந்தம் இலங்கையில் சுமார் 800 கருக் கலைப்புகள் இடம்பெறுகின்றன.
14 சதவீதமான சிறுவர்கள் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு முன்னரே பாடசாலைகளிலிருந்து இடைவிலகுகின்றார்கள்.
தற்கொலையில் உலகத்தில் நான்காவது இடத்தில் இலங்கை இருக்கின்றது.
இவை அனைத்தும் சிறுவர்கள் தொடர்பாக சுகாதார அமைச்சு, சிறுவர் செயலகம் மற்றும் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்ட அண்மைக்கால தகவல்களாகும்.
மேலும், மதுபானப் பாவனையில் மட்டக்களப்பு முன்னிலையில் உள்ளது' என்றார்.
முன்பிள்ளைப் பருவமானது பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பருவமாகும். இந்தப் பருவத்திலேயே பிள்ளைகளுக்கு 85 முதல் 90 சதவீதமான மூளை வளர்ச்சி ஏற்படுகின்றது. எனவே, இந்தப் பருவத்தில் நாங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய நல்ல விடயங்களை கொடுப்பதன் மூலம் அவர்கள் நல்ல விருத்தியை அடைய முடியும்' என்றார்.
58 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
3 hours ago
4 hours ago