Niroshini / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பெண்களை பாதிக்கும் பாலின பாகுபாட்டு சட்டங்கள் இலங்கையில் காணப்படுகின்றன என உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.
'உலக வங்கி குழுக்களின் பெண்கள் வணிகம் மற்றும் சட்டம் 2016' என்ற தலைப்பில் இன்று புதன்கிழமை வெளியான அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
பெண் தொழிலாளர் படையின் பங்களிப்பை பாதிக்கும் சட்ட வேறுபாடுகள் இலங்கையில் காணப்படுகின்றன.
பெண்கள் சுரங்கத் துறையில் பணியாற்றுவதில் இருந்து வருகின்ற தடை மற்றும் சில பணிகளைச் செய்வதில் குறிப்பாக தொழிற்சாலைகளில் பணியாற்றுவதில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், மேலும் பெண்களை பணிக்கமர்த்தல் அல்லது வாடகைக்கு அமர்த்துதல் போன்றவற்றில் காட்டப்படும் பாலின அடிப்படையிலான பாகுபாட்டுக்கு எதிராக நன்மையளிக்க கூடிய எந்த சட்டங்களும் இலங்கையில் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
8 minute ago
22 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
22 minute ago
3 hours ago
4 hours ago