2025 மே 07, புதன்கிழமை

'9 இலட்சம் நோயாளர்களுக்கு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை'

Niroshini   / 2015 நவம்பர் 22 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் 9 இலட்சத்து 82ஆயிரத்து 996 நோயாளர்களுக்கு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பதிகாரி டொக்டர் எம்.ஐ.அஹமட் பரீத் தெரிவித்தார்.

இதற்கமைய 2011ஆம் ஆண்டில் 221,976 பேருக்கும் 2012ஆம் ஆண்டில் 236,293 பேருக்கும் 2013ஆம் ஆண்டில் 25,8706 பேருக்கும் 2014ஆம் ஆண்டில் 26,5571 பேருக்கும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த நான்கு ஆண்டுகளில் வெளிநோயாளர் பிரிவில் 47,621 நோயளர்களுக்கு மருந்தூசி ஏற்றப்பட்டுள்ளதுடன் 25,864 நோயாளர்களுக்கு காயங்களுக்கு மருந்து கட்டும்  சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இதே ஆண்டுகளில் 47,3375 பேருக்கு தொழில்நுட்ப ஆய்வு கூட பரிசோதனைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அதே ஆண்டுகளில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்கென வந்த 136 பேர் மரணமாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X