2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

04 இலட்சம் பேருக்கு வேலை இல்லை

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 01 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தில் 04 இலட்சம் பேர் வேலையற்றவர்களாக உள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்கள் ஒத்துழைக்க வேண்டுமென மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

அத்துடன், மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களில் ஆளணிகள் மற்றும்  ஆளணி வெற்றிடங்கள் தொடர்பில்   விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் சனிக்கிழமை (31)  நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற அதிகாரிகளுக்கான கூட்டத்திலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'மக்கள் பிரதிநிதிகள் இல்லாத உள்ளூராட்சிமன்றங்களில் அதிகாரிகள் மக்கள் சேவையை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மக்களிடமிருந்து கிடைக்கும்; முறைப்பாடுகளை உடனுக்குடன் கவனத்திற்கொண்டு அவற்றை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.

உள்ளூராட்சிமன்றங்கள் தொடர்பிலும் ஏராளமான முறைப்பாடுகள் மக்களிடமிருந்து எமக்கு கிடைக்கின்றன
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் 29ஆம் திகதிகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கிழக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றங்களும் தமது உள்ளூராட்சிமன்றப் பிரிவுகளில் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகளை காட்சிப்படுத்த வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X