Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 13 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
எமது இளைஞர்களின் முன்மாதிரியை எமது மக்கள் ஏற்றுக்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியத்துக்கு உரமான சிந்தனை விதைகளை விதைக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், 'இம்முறை நடைபெற்ற இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர்கள் எமது மாவட்ட தமிழ் மக்களுக்கு தெளிவான செய்தியை வழங்கியுள்ளார்கள் .எமது இளைஞர்களின் ஒற்றுமை இன உணர்வு இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது .
எமது இளைஞர்களின் இத்தகைய சிந்தனை எமது மாவட்ட மக்களிடம் இருந்திருக்குமாயின், கிழக்கு மாகாண சபையில் மத்திய அரசில் பல ஆச்சரியங்களை நாம் நிகழ்த்தியிருக்க முடியும் . காலம் கடந்த ஞானம் பயன்படாதுதான் என்றாலும் எதிர்காலத்துக்கு இந்த ஞானம் அவசியம் பயன்படவேண்டும்.' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago