Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 11 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இளைஞர் நாடாளுமன்ற தேர்தலை நடத்தியதன் மூலம் மட்டக்களப்பு தொகுதியில் இளைஞர்கள் மத்தியில் இனவாதம் தூண்டப்பட்டுள்ளது என காத்தான்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தரும் சமூக சேவையாளருமான வை.எல்.எம்.இப்றாகீம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு தேர்தல் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதி என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.தமிழ் பிரதிநிதித்துவமும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் வகையிலேயே மட்டக்களப்பு தேர்தல் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதிகளாக அமையப்பெற்றுள்ளது.
ஆனால்,நடைபெற்ற இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில்,மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கென ஒரு பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கும் ஒரு பிரதிநிதித்துவம் வரத்தக்கதான அமைப்பிலேயே மட்டக்களப்பு தேர்தல் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக வகுக்கப்பட்டிருக்க வேண்டும்.மாறாக ஒற்றை அங்கத்தவர் தொகுதியாக்கியதன் மூலம்; இனவாதம் புகுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும்,இளைஞர்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட அமைப்புக்குள் இன ரீதியாக பிரிந்து செயற்படுகின்ற தொனியை மட்டக்களப்பு தொகுதியில் இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் ஏற்படுத்தியிருக்கின்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உயரதிகாரிகள் இந்த விடயத்தை தூர நோக்குடன் கையாண்டு இனவாதம் ஏற்படவிடாமல் பாதுகாத்திருக்க வேண்டும்.
இது விடயத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago