Menaka Mookandi / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
நல்லாட்சி அரசில், இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் முறைமைகள் மாற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால், இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில், முஸ்லிம் இளைஞர்களை பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்ற வேண்டாம் என, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளன அமைப்பாளர் பாரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கை இளைஞர் நாடாளுமன்றத்தின் நான்காவது தேர்தல், இம்மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்காக, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடு பூராகவும் தமது பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில், மட்டக்களப்பிலும் இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
இத்தேர்தலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் பிரதிநிதித்துவ தேர்தல் முறைமையினை புறம்தள்ளி தொகுதிவாரி முறையினை, 2015ஆம் ஆண்டு விஷேடமாக நல்லாட்சி அரசாங்க காலத்தில் அறிமுகம் செய்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இளைஞர் நாடாளுமன்ற தேர்தல், இரண்டு முறைகள் நடத்தப்பட்டது. அந்த தேர்தல், இலங்கையில் உள்ள 334 பிரதேச செயலகப்பிரிவில் இருத்து 334 பிரதிநிதிகள் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக போட்டி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர்.
இலங்கையில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களில் தமிழ் பேசும் மக்களில் தமிழ்களும்,முஸ்லிம்களும் உள்ளனர் மட்டக்களப்பில் சிறுபான்மை இனத்தவர்களில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களுக்கு இத் தொகுதிவாரி முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் மட்டக்களப்பில் உள்ள தேர்தல் தொகுதிகளில் கல்குடா, மட்டக்களப்பு,பட்டிருப்பு ஆகிய மூன்று தொகுதிகளில் எமது சகோதர உறவுகளான தமிழ் மக்களே அதிகமாக வாழ்வதனால் அவர்களில் இருந்து மாத்திரம் தான் மூவர் பாராளுமன்றம் செல்ல முடியும். இவ்வாறு இத்தேர்தல் முறைமை நடைமுறையில் ஏனைய தேர்தலிலும் கையாளப்பட்டால் ஒரு பிரதிநிதியை கூட இளைஞர் நாடாளுமன்றம் அல்ல ஏனைய தேர்தலிலும் பெற்றுக்கொள்ள முடியாது என்பது தெளிவான உண்மையாகும்.
இதனையே நாம் கடந்த இளைஞர் நாடாளுமன்ற தேர்தலிலும் கண்டோம். இம்முறையும் எமக்கு இவ்வாறான அநீதிகள் இடம்பெற கூடாது என்பதற்காகவே நாம் பல்வேறு மட்டங்களில் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
'ஹோப்' நம்பிக்கை ஊட்டல் என்ற அடிப்படையில் தற்போது அனைத்து வேலைத்திட்டங்களையும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுத்து வருகின்றது.
ஆனால் கடந்த அரசாங்க காலத்தில் இளைஞர்களாகிய நாம் வெறும் கானல் நீரைத்தான் நீர் என்று எமது தாகம் தீர்க்க நீண்ட தூரம் நீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடைப்பயனம் மேற்கொண்டோம் ஆனால் அங்கு இறுதியில் நாம் கண்டது பொய்யான ஒளியின் விம்பங்களேயாகும் என்று பின்னரே நாம் அறிந்து கொண்டோம் ஆனால் நல்லாட்சி அரசாங்க காலத்தில் கானல் நீரையும் நீராக மாற்றும் வல்லமையை நாம் பெற்றுள்ளோம் 'கனவு காண்பிப்பதற்கு அல்ல நிஜமாக்குவதற்கு'என்ற அடிப்படையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணி முன்னெடுக்கப்படுகின்றது. இது இளைஞர்களுக்கு கிடைத்த வரபிரசாதமாகும்.
இருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபான்மை இனத்தவர்களில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம் இளைஞர்களுக்கு இந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் என்ன தீர்வினை இந்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வழங்க போகிறது. என்பது எமது மாவட்டத்தின் முஸ்லிம் இளைஞர்களின் கேள்வியாகும். முஸ்லிம் பிரதேசங்களில் கடமையாற்றும் இளைஞர் சேவை அதிகாரிகள் தமது தொழில் நிமித்தம் இளைஞர்களுக்கு இந்த தெளிவினை வழங்க ஒரு போதும் முன்வராத நிலையில் உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளன அதில்; ஓட்டமாவடி, வாழைச்சேனை மத்தி, ஏறாவூர்,காத்தான்குடி என்ற நான்கு பிரிவுகள் தான் முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளாகும் ஆயினும் இப் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு முடிவுக்கு வந்தனர்.
'இம்முறை நாம் யாரும் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வது இல்லை' என்று இருப்பினும் சில வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்த வேட்பு மனு தாக்கல்களை செய்வதற்கு இளைஞர்கள் உளவியல் ரீதியாக இளைஞர் சேவை அதிகாரிகளினால் தூண்டப்படுகின்றனர்.
இது எந்தளவுக்கு சாத்தியம் இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் குறித்து மட்டக்களப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் இனவாதத்தினை தமது அரசியல் முதலீடாக கொண்டுள்ள அரசியல் பிரமுகர்களின் கடந்த கால ஊடக அறிக்கைகளை பார்க்கும் போது பிரதேச வாதம், மதவாதம், இனவாதம் போன்ற விடயங்களை புறம் தள்ளி இளைஞர்கள் என்று ஒன்றிணைந்த எமக்கு மத்தியில் தமிழ்,முஸ்லிம்,சிங்களவன் என்ற வேறுபாட்டை ஊக்குவித்து விடுமே என்ற அச்சம் எமக்குள்ளது. இது ஒரு புறம்மிருக்கட்டும் நாம் இன்று எமது உரிமைக்காக மாத்திரமே குரல் கொடுக்கின்றோம்.
முஸ்லிம் இளைஞர்களை பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றி விட வேண்டாம் இதில் எமது இளைஞர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் முறைமைகள் மாற்றப்பட வேண்டும் நாட்டிலுள்ள 334 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் ஒவ்வொரு இளைஞர் பாராளுமன்ற பிரதி நிதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் அல்லது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி, வாழைச்சேனை மத்தி, ஏறாவூர்,காத்தான்குடி போன்ற முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கி ஒரு தேர்தல் வலயமாக மாற்ற வேண்டும் அல்லது மட்டக்களப்பு,கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளை இரட்டை அங்கத்துவ தேர்தல் தொகுதியாக மாற்றியமைக்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும் என்பது எமது இளைஞர்களின் ஒருமித்த குரலாகும்.
இந்நிலையில் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் எமது உரிமைகள் புறக்கணிக்கபடும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் இளைஞர்கள் யாரும் இளைஞர் சேவை அதிகாரிகளோடும் எமது சகோதர இனத்தவர்களான தமிழ் இளைஞர்களுடன் முரண்பட்டு விடக்கூடாது ஏன் என்று சொன்னால் எதிர்காலத்தில் நல்ல அரசியல் கலாச்சாரத்தை இளைஞர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து தான் மாற்றி அமைக்க வேண்டும்.
நாம் என்றும் பொறுமையை கடைப்பிடித்து புத்திசாதுரியமாக எமது நியாயமான உணர்வு பூர்வமான கோரிக்கைகளை முன்கொண்டு செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்;து செயற்படுவோம் என்பதனை இந்ந மாவட்டத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர்கழக அமைப்பாளர் என்ற வகையில் உங்கள் அனைவரையும் அன்பாய் கேட்டுக்கொள்கின்றேன்” அவ்றிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago