Niroshini / 2015 நவம்பர் 11 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இளைஞர் நாடாளுமன்ற தேர்தலை நடத்தியதன் மூலம் மட்டக்களப்பு தொகுதியில் இளைஞர்கள் மத்தியில் இனவாதம் தூண்டப்பட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதும் கண்டிக்கப்பட வேண்டியதுமாகும் என மட்டக்களப்பு தொகுதியில் வெற்றியடைந்த கோட்டைமுனையைச் சேர்ந்த எட்வேர்ட் ஜெயராசா பயஸ்ராஜ் தெரிவித்தார்.
இது குறித்து இன்று புதன்கிழமை மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நடைபெற்று முடிந்த இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மூன்று தமிழ் சமூக இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இதை இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்குவது வருந்தத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என். நைரூஸ் ஒரு முஸ்லிம் அதிகாரியாக இருந்தபோதிலும் அவர் ஒரு போதும் இனவாதக் கண்ணோட்டத்துடன் செயற்படவில்லை என்பதற்கு நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளே சான்றாக இருக்கின்றன.
அதேபோல், நான் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்த போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு அதிகமான முஸ்லிம் சகோதரர்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.
மாறிவரும் தற்போதைய நவீன உலகில் இன்னமும் இனவாத சிந்தனைகளை இளைஞர்கள் மத்தியில் விதைக்க நினைப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்..
மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதி என்பது தமிழருக்காகவோ முஸ்லிம்களுக்காகவோ உருவாக்கப்பட்டதல்ல. அது தேர்தலில் அதிகூடிய மக்கள் செல்வாக்குடன் வெற்றி பெறுபவர்களுக்கே உருவாக்கப்பட்டதாகும்.இதை இனவாதத் தெரிவாக பார்ப்பது வருந்தத்தக்கது என்றார்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025